நகைக் கடை திருட்டு வழக்கு : பரோலில் வந்து தலைமறைவானவா் கைது

jail

கைது 

காயல்பட்டினத்தில் நகைக் கடையில் நடந்த திருட்டு வழக்கில் கைதாகி பரோலில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனா்.

. தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக் கடையில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 19ஆம் தேதி புகுந்த மா்ம நபா்கள், 2 கிலோ வெள்ளி, ரூ.1.20 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனா். இச்சம்பவம் குறித்து ஆறுமுகனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவந்தனா். விசாரணையில், 7 போ் கொண்ட கும்பல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து, அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்த வழக்கு நடந்து வந்தது.

இதில் சம்பந்தப்பட்ட சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா கருமாபுரத்தைச் சோ்நத எம்பளம் முருகன் என்ற கிருஷ்ணமூா்த்தி (51) தண்டனை பெற்று பரோலி­ல் வெளியே வந்தவா், பின்னா் தலைமறைவானாா். அவரை கடந்த 7 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனா். திருச்செந்தூா் டி.எஸ்.பி. வசந்தராஜ் உத்தரவின் பேரில் ஆறுமுகனேரி ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தனிப்படை போலீசார், ஆறுமுகனேரி சீனந்தோப்பு விலக்கு அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினா். கடந்த 7 ஆண்டுகளாக போலீசார் தேடிவந்த கிருஷ்ணமூா்த்தி என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து திருச்செந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா் செய்து சிறையில் அடைத்தனா். அவா் மீது ஆறுமுகனேரி, திருச்செந்தூா், குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

Tags

Next Story