சேலத்தில் நர்சிடம் நகை பறிப்பு

சேலத்தில் நர்சிடம் நகை பறிப்பு

பைல் படம்

சேலத்தில் நடந்து சென்ற நர்சிடம் நகை பறித்த மர்ம ஆசாமிகள் குறித்து போலீஸ் விசாரணை நடக்கிறது.
சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். அவரது மனைவி சாந்தகுமாரி (வயது 48). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். சாந்தகுமாரி கடந்த 22-ந் தேதி அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சாந்தகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 1¼ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story