சிவகாசியில் மீண்டும் ஓடும் பஸ்ஸில் நகை திருட்டு...

சிவகாசியில் மீண்டும் ஓடும் பஸ்ஸில் நகை திருட்டு...

காவல்துறை விசாரணை


சிவகாசியில் மீண்டும் ஓடும் பஸ்ஸில் நகை திருட்டு...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பூவநாதபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி கோசலை (65). இவர் சம்பவத்தன்று சிவகாசி அருகே சுந்தரராஜபுரத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டு அங்கிருந்து பூவநாதபுரத்திற்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். மூதாட்டி கோசலை அருகில் அமர்ந்து இருந்த ஒரு பெண், கோசலையிடம் உங்கள் செயின் அறுந்து உள்ளது.அதனால் அதனை கழற்றி பையில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.இதனை நம்பிய கோசலை,தனது செயினை கழற்றி பணப்பையில் வைத்து அதனை கட்டை பையில் வைத்துள்ளார்.பின்னர் சிறிதுநேரத்தில் பஸ் சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளது. அங்கு நகையை சரி பார்த்த போது கட்டை.பையில் வைத்திருந்த பணப்பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிவகாசியிலிருந்து சாத்தூருக்கு பஸ்ஸில் சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர் 7 பவுன் நகையை திருடி சென்ற நிலையில் மீண்டும் சிவகாசியில் பஸ்ஸில் திருட்டு சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story