வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்க நகை பறிப்பு
திருட்டு
காரிமங்கலம் அருகே வீட்டில் தூங்கிப் போய்விடும் தங்க நகை பறித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அடுத்த சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ராணி இவர் நேற்று முன்தினம் இரவுவீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ராணியை மிரட்டி கழுத்தில் அணிந்து 15 பவுன் தங்க சங்கிலி மற்றும் தோடு ஆகியவற்றை பறித்து சென்றார்.
இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து ராணி காரிமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் காளிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story