வீடுகளின் பூட்டை உடைத்து 24 பவுன் நகைகள் திருட்டு

வீடுகளின் பூட்டை உடைத்து 24 பவுன் நகைகள் திருட்டு

பைல் படம் 

தஞ்சாவூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து 24 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

. தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி மின் நகர் பகுதி கம்பர் நகரைச் சேர்ந்தவர் ராமநாதன் மனைவி அஞ்சலிதேவி (65). இவர் ஏப்ரல் 29 ஆம் தேதி புதுக்கோட்டையிலுள்ள மகள் வீட்டுக்குச் சென்றார். இதையடுத்து, மே 19 ஆம் தேதி மற்றொரு மகள் வீட்டைப் பூட்டிவிட்டு சென்னைக்கு புறப்பட்டார்.

இந்நிலையில், ஜூன் 6 ஆம் தேதி இவரது வீட்டு முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதை பக்கத்து வீட்டினர் மூலம் அறிந்த அஞ்சலிதேவி திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு சம்பவம் இதேபோல, தஞ்சாவூர் அருகே நார்த்தேவன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மனைவி பிரீத்தீஸ்வரி (23). இவர் மே 20 ஆம் தேதி திருமண விழாவுக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story