விராலிமலையில் ரூபாய் 4 கோடி நகைகள் பறிமுதல்!

விராலிமலையில் ரூபாய் 4 கோடி நகைகள் பறிமுதல்!

 4 கோடி நகைகள் பறிமுதல்

விராலிமலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் கணக்கில் வராத ரூ. 4 ஹகோடியே 18 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விராலிமலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் கணக்கில் வராத ரூ. 4 ஹகோடியே 18 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ள நிலையில், கரூர் மக்களவைத் தொகுதி, விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட விராலிமலை - திருச்சி சாலையில் பூதகுடிசுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவ்வழியே மதுரை நோக்கிச் சென்ற ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், கணக்கில் காட்டப்படாத ரூ. 4 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 4 கோடியை 18 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி ஆபரணப் பொருள்களை பறிமுதல் செய்து இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story