நண்பரை கம்பால் அடித்து கொன்ற ஜார்க்கண்ட் வாலிபர் கைது.
காவல் நிலையம்
ஜார்க்கண்ட் மாநிலம் ஓர்சா லெடிக்கார் பகு தியை சேர்ந்தவர் மோகன் நகீசியா இதே மாநிலம் வில் ஜாமிதிக் போஸ்ட் மகுடனர் லடிக்கார் பகுதியை சேர்ந்தவர் புதூநாகோ சியா மகன் திலேஸ் நாகோசியா. இருவரும் கூலி தொழிலாளிகள் திருமணம் ஆகவில்லை. இரண்டு பேரும் கடந்த மூன்று மாதங்களுக்கு பெருஞ்சிலம்பு பகுதியிலுள்ள தனியா ருக்கு செந்தமான முன் குமாரபுரம் அருகே உள்ள வேளிமலை எஸ்டேட் டில் வேலைக்கு சேர்ந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடிதகராறு, வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறின் போது, மோகன் நகீசியாவை திலேஸ் நாகோசியா மரக்கம்பை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மோகன் நகசியா ஆசாரிப்பழம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.தலைமறைவாக இருந்த திலேஸ் நகோசியாவை இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து, பத்மனாபபுரம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.