ஜே.கே.கே. முனிராஜா சுவாமிகள் - மூன்றாம் ஆண்டு குருபூஜை விழா

ஜே.கே.கே. முனிராஜா சுவாமிகள் - மூன்றாம் ஆண்டு குருபூஜை விழா

குருபூஜை விழா

குமாரபாளையம் ஜே.கே.கே. சம்பூரணி அம்மன் அறக்கட்டளை நிறுவன வளாகத்தில் உள்ள சம்பூர்னேஷ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, முனிராஜா சுவாமிகள் மூன்றாம் ஆண்டு குருபூஜை விழாவில், விழா மலர் வெளியீட்டு விழா நடந்தது.  
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே. சம்பூரணி அம்மன் அறக்கட்டளை, ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள சம்பூர்னேஷ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, முனிராஜா சுவாமிகள் மூன்றாம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கோவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழா நடந்தது. ஸ்ரீசம்பூர்னேஷ்வரர், ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர். ஸ்ரீஅஷ்டலட்சுமிகள் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. யாகசாலை பூஜை, கும்பாபிஷேகத்தை சிவகுமார் சாஸ்திரிகள் நடத்தினார். ஆனந்தாஸ்ரமம் குரு முதல்வர் பூரணானந்த சுவாமிகள் தலைமை வகித்தார். வேதாந்த மடம் குரு முதல்வர் சித்ருபானந்தா, நெரூர் கைலாச ஆஸ்ரம மடாதிபதி யோகேசானந்தா, மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் வசந்தகுமாரி முனிராஜா, ஜெயபிரகாஷ், கஸ்தூரி பிரியா, கிருபாகர், முரளி, ஸ்ரீநித்யா, கரன்ராஜா, கும்பாபிஷேக மலரை வெளியிட, டாக்டர் கேசவமூர்த்தி பெற்றுக்கொண்டார்முனிராஜா பற்றிய பாடல்கள் வெளியிடப்பட்டன.

Tags

Next Story