தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் பணி ஆணை வழங்கும் விழா

தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் பணி ஆணை வழங்கும் விழா

நாகர்கோவில் தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.


நாகர்கோவில் தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான் கனட தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் பணி அமர்வு உறுதி ஆணை வழங்கும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. தாளாளர் அருள் பணியாளர் மரியவில்லியம் தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு துறை தலைவர் பொறியாளர் ஆண்டனி சேவியர் அறிக்கை வாசித்தார்.

இந்த முகாமில் கல்லூரியில் நடைபெற்ற மொத்த 42 வேலைவாய்ப்பு முகாம்களில் 433 பணி அமர்வு உறுதி அணைகள் வழங்கப்பட்டுள்ளது. மின்னணுவியல் துறையில் 97 சதவீதம், இயந்திரவியல் துறையில் 83 சதவீதம், சிவில் துறையில் 72 சதவீதம் மற்றும் கணினி சார்ந்த துறைகளில் 73% மாணவர்களும் பணி ஆணைகள் பெற்றுள்ளனர்.

மேலும் இந்த வருடம் டிசிஎஸ், டெக் மகேந்திரா, யூஎஸ் டீ குளோபல், ஸ்டைனர் எலக்ட்ரிக், பினக்கில் இன்போடெக், கார் டெக்னாலஜி போன்ற நிறுவனங்கள் வேலைக்கு மாணாக்கர்களை சேர்த்துக் கொண்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூக்ஸ் அண்ட் குரூப்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெர்மின் ஜெட்டா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story