கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் 82 மாணவிகளுக்கு பணி ஆணை

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் நடந்த வளாக நேர்காணலில் தேர்வான 82 மாணவியருக்கு, கல்லூரி முதல்வர் பணி ஆணைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார் சங்கத்தில் அமைந்துள்ள( பாக்ஸ் கான் )நிறுவனத்தில் (ஐபோன் ) உதிரிப்பாக பிரிவில் பணி புரிவதற்கு மாணவியர்களுக்கான வளாக நேர்காணல். இன்று நடைபெற்றது. இளநிலை இறுதி ஆண்டு மாணவியர், கலந்து கொண்டனர். புருடுல் எச்,ஆர் நிறுவனம் பணிக்கு தேர்வு செய்தனர். கலந்து கொண்ட மாணவியர்களில் 82 மாணவியர் பணி வாய்ப்பு பெற்றனர். முதல்வர் முனைவர் அ.மாதவி அவர்கள் பணி ஆணை வழங்கி பாராட்டிப் பேசினார்.

“இளம் வயதில், படிக்கின்ற காலத்தில், நீங்கள் பெற்ற வாய்ப்பினை, நன்கு பயன்படுத்திக் கொண்டு. வாழ்க்கையில் சிறப்பான உயரத்தை எட்ட வேண்டும்.பெற்றோர்களுக்கும், கல்வி தந்த ஆசிரியர்களுக்கும், பெருமை தர வேண்டும்.என வாழ்த்தி பேசினார்.” வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர், முனைவர் சா. ரமேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வேதியியல் துறைத் தலைவர் முனைவர் மா. மீனாட்சி சுந்தரம், தமிழ்த்துறை தலைவர் முனைவர் எஸ்.காளிமுத்து ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story