குமாரபாளையத்தில் வேலை வாய்ப்பு முகாம்

குமாரபாளையத்தில் வேலை வாய்ப்பு முகாம்
X

வேலைவாயப்பு முகாம்


குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சேவை சங்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சேவை சங்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. தி.மு.க. முன்னாள் நகர துணை செயலர் ரேவதி, அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சுகந்தி, சமூக சேவகி சித்ரா, இல்லம் தேடி கல்வி ஜமுனா, சித்ரா ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர்.

60-க்கும் மேற்பட்ட தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஆட்களை தேர்வு செய்ய நேர்முகத் தேர்வை நடத்தினர் 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்ட 154 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை விடியல் ஆரம்பம் நிறுவனர் பிரகாஷ், தொழிலதிபர் கோபாலகிருஷ்ணன், பஞ்சாலை சண்முகம், ரெயின்போ கணேஷ்குமார், தீனா ஆகியோர் வழங்கினார்கள்.

Tags

Next Story