மதுரையில் டிச.16ல் வேலை வாய்ப்பு முகாம்!

மதுரையில் டிச.16ல் வேலை வாய்ப்பு முகாம்!

யாதவ கல்லூரி

மதுரையில் டிச.16ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

மதுரையில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் டிச.16 ல் நடக்க உள்ளது.திருப்பாலை இ.எம்.ஜி., யாதவர் மகளிர் கல்லுாரியில் நடைபெற உள்ள இம்முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

இதில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.எட்டாம் வகுப்பு முதல் மேல்நிலை, இளநிலை, முதுநிலை, பட்டயம், தொழிற்கல்வி படித்தவர்கள் சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்க வேண்டும்.

இதுதொடர்பான விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0452 - 2566022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

Tags

Next Story