போலி பணி ஆணை வழங்கி மோசடி - தம்பதி உட்பட 5 பேர் மீது வழக்கு
காவல்துறை விசாரணை
திற்பரப்பு பகுதியில் வங்கியில் வேலை வாங்கி தருவதாக போலி பணி ஆணை வழங்கி பணமோசடி செய்த தம்பதி உட்பட 5 பேர் மீது வழக்கு.
திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் ஜெமின்ஸ் கிப்லின்.பி.இ., பட்டதாரியான இவர், தனக்கு எஸ்.பி.ஐ.,யில் வேலை வாங்கி தருவதாக 5 பேர் கும்பல் 30 லட்சத்து 34 ஆயிரத்து 950 ரூபாய் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்துள்ளார்.புகாரில்,புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி அம்பிளி.இவர்களுடன் மேலும் 3 பேர் சேர்ந்து எஸ்.பி.ஐ.,யில் வேலை வாங்கி தருவதாக கூறினர். அதற்கு ரூ.30 லட் சத்திற்கு மேல் வழங்க வேண்டும் எனவும் கூறினார். கடந்த பிப்ரவரி 18ம் தேதி சுரேஷ்குமார், அம்பிளி ஆகியோர் வீட் டில் வந்து ரூ.13 லட்சம் வாங்கி சென்றனர். பின்னர் இரண்டு முறையாக 17,34,950 ரூபாய் வங்கி மூலம் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி தபால் மூலம் பணி ஆணை அனுப்பி வைத்தனர். ஆனால் அது போலி பணி ஆணை என்பதை அறிந்து பணத்தை திருப்பி கேட்டேன். பணம் திருப்பி தர மறுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். இந்த புகாரில் குலசேகரம் போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story