மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்றாக பிரிப்பது, ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஆகியவற்றை கைவிட கோரி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிக்க G.O 6, மற்றும் G.O .7 மூலம் அனுமதி வழங்கி உள்ளது. இதை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தை கைவிட கோரியும், பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில், கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு பெரம்பலூர் வட்டம். செயலாளர்கள் தலைமையில் நடைபெற்ற, ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு -சிஐடியு சங்கம் சார்பில் . திருச்சி மண்டல செயலாளர். அகஸ்டின் . கோட்ட தலைவர் அண்ணாதுரை, தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் கழகத்தின் காயத்ரி, அருள்ஜோதி, தமிழ்நாடு மின்வாரிய ஐக்கிய மற்றும் பொறியாளர் சங்கத்தின் வட்டச் செயலாளர் சின்னச்சாமி, வட்ட துணை தலைவர் நீலமேகம், சம்மேளனம் சார்பாக கனி, ராமமூர்த்தி, AESU மண்டல செயலாளர் பெரியசாமி மற்றும் அனைத்து தொழிலாளர்களும் பொறியாளர்களும் பொறியாளர்கள் அசோக்ராஜ், அய்யனார், சேகர், ராஜேந்திரன், சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story