ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருக்கோவிலுாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருக்கோவிலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். டிட்டோஜாக் அமைப்புடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்றிட ஆணைகள் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கள்ளக்குறிச்சி வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாரத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். பிரேம்குமார் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் சதீஷ் வரவேற்றார்.
Next Story