மங்கலதேவி கண்ணகி கோயிலில் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டுகுழு கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்
மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழுநிலா விழாவை முன்னிட்டு நேற்று இடுக்கி மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டுகுழு கூட்டம் குமுளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் இரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் வனத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் கோரிக்கையாக வரும் 23-04- 2024 சித்திரை முழுநிலா விழா அன்று பக்தர்களுக்கு உணவு வழங்கும் டிராக்டர்களின் எண்ணிக்கையை ஆறிலிருந்து ஏழாக மாற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் தேர்தல் சமயம் என்ற காரணத்தைக் காட்டி இரு மாவட்ட ஆட்சியர்களும் மறுத்துவிட்டார்கள். வழக்கம்போல் ஆறு டிராக்டர்களின் மட்டுமே மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் சார்பாக உணவு வழங்கலாம் என்று கூறிவிட்டார்கள். பக்தர்கள் வந்து செல்வதற்கு கூடுதலாக வாகனங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் சார்பாக மூன்று பொங்கல் வைத்து கொள்ளலாம் என்றும், கடந்த ஆண்டுகளில் இருந்த நடைமுறைகள்,
இவ்வாண்டும் பின்பற்றப்படும் என்றும் இரு மாநில பக்தர்களும் திருவிழா அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று இருமாவட்ட ஆட்சித்தலைவர்களும் கேட்டுக்கொண்டனர். கூட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் சார்பாக, செயலாளர் ராஜகணேசன் பொருளாளர் முருகன் பொறுப்பாளர்கள் கருத்தகண்ணன், பஞ்சுராஜா, சரவணன், காசிராஜன், சபரிநாதன், சுதாகர், ஈஸ்வரன், தனிக்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்