தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக் குழு உண்ணாவிரதம்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டுக் குழு நடவடிக்கை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வை வாய்ப்பை பறிக்கக்கூடிய, மாநில முன்னுரிமை வலியுறுத்தும் அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் , கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் , பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழுவுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக் கொண்டு காணொளி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தெரிவித்த ஈ எம் ஐ எஸ் உள்ளிட்ட 12 கோரிக்கை தொடர்பான எழுத்தப்பூர்வமான ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
Next Story