கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் அரசு மருத்துவமனை 30 படுக்கை வசதியுடன் அமைந்துள்ளன. இந்த மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளுக்கான வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று கெங்கவல்லி அரசு மருத்துவமனையில், சேலம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் (பொ) வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களைபார்வையிட்டார். பின்னர் அனைவரையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். மருத்துவம்னைக்கு வரும் பொது மக்களை கண்ணியமாக நடத்தவேண்டும். கர்ப்பிணி பெண்களை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது, அரசு மருத்துவமனையின் மருத்துவர் செந்தில்குமார், மருத்துவர்கள் உடனிருந்தனர்.
Next Story