கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு

கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு

அரசு மருத்துவமனை

கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் தினந் 2 தோறும் 300க்கும் மேற் பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல் கின்றனர்.

இந்நிலையில் நேற்று, சேலம் மாவட்ட மருத்துவம் மற்றும் நலத் துறை இணை இயக்குனர் பழனிசாமி, கெங்கவல்லி 2. அரசு மருத்துவமனையில் - திடீர் ஆய்வு மேற்கொண் டார். மருத்துவமனையில் உள்ள கழிவறை சுத்தம் இல்லாமல், மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை சூழ்ந்து உள்ளதை பார்த்த அவர், உடனடியாக சுத்தம் செய்யும்படி பணியாளரிடம் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிடம், சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலருக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, கெங்கவல்லி மருத்துவ அலுவலர் செந்தில்குமார் மற்றும் மருத்து வர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story