எடப்பாடி அரசு மருத்துவமனையில் ஒரே ஆண்டில் 65பேருக்கு மூட்டு அறுவை சிகிச்சை



செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையை கடந்த 2022 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு மருத்துவர்கள் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை புரிந்து வந்தனர். அதனடிப்படையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக எடப்பாடி அரசு மருத்துவமனையின் ஆர்த்தோ மருத்துவர் பாலாஜி இந்த ஆண்டில் மட்டும் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 65 நபர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்து சாதனை புரிந்துள்ளார்.
தற்போது கோமதி என்கிற பெண்ணிற்கு இரண்டு கால்களுக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தும், முனியன் என்பவருக்கு முதன்முதலாக இரண்டு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்து சாதனை புரிந்தமைக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக தலைமை மருத்துவர் கோகுல்கிருஷ்ணன், மற்றும் ஆர்த்தோ மருத்துவர் பாலாஜி ஆகியோர் கூறும் போது தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைக்கு நிகராக எடப்பாடி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளதாகவும் எடப்பாடி மட்டுமல்லாமல் திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும் வருகை புரிந்த நோயாளிகளுக்கு இந்த ஆண்டில் மட்டும் 65 நபர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளதாக பெருமையுடன் தெரிவித்தனர்.
சாதனை புரிந்த ஆர்த்தோ அரசு மருத்துவர் பாலாஜி மற்றும் அரசு மருத்துவ குழுவினர்களுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



