ராமநாதபுரத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசப்பிரபு சமூக விரோதிகளால் கொடூரமான ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பு போராடிவரும் நிலையை உருவாக்கிய சமூக விரோதிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின், நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் , தனபாலன், ரகு ,ராமு, குமார்,இளங்கோ, மகேஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பிரபு ராவ், சோனை முத்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். தமிழகத்தில் செய்தியாளர்களை வரைமுறைப்படுத்தி சமூக விரோதிகள் தாக்கப்படுவதை மத்திய மாநில அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் தவறு செய்து மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அல்லது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பணி பாதுகாப்பு இல்லை என்றால் தமிழக முழுவதும் செய்தியாக குடும்பத்தோடு போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட எனவும் எச்சரிக்கை செய்தனர்.