ஜெ., பிறந்தநாள் - அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா
செங்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த தின விழா நேற்று மாலையில் நடைபெற்றது, அதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை நகரக் கழக செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி தொண்டர்களும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story