இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அறிவுறுத்தல்

அரூரில் பேக்கரி கடையில் பிளாஸ்ட்டிக் கவருக்காக ஏற்பட்ட தகராறில் அடி வாங்கிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை விசாரித்த நீதிபதி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் சேலம் பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் அய்யப்பன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். ஆண்டிப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், தனுஷ் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் பேக்கரி கடையில் வாட்டர் பாட்டில், தின்பண்டங்கள் பொருட்களை வாங்கி சென்றுள்ளார்கள், அதில் நிப்பட் மட்டும் எடுத்து செல்லாமல் கடையிலேயே விட்டு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து, விட்டு சென்ற பொருளை வாங்க வந்த இளைஞர்களுக்கும் கடையின் உரிமையாளருக்கும் பிளாஸ்டிக் கவரில் பேக் செய்து தராதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அருகே இருந்த நபர் ஒருவர் அந்த இளைஞரை அடித்து கடையிலிருந்து வெளியேற்றியுள்ளார். இளைஞர்களை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியதால். தமிழ்செல்வன் என்ற இளைஞருக்கு பல் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இளைஞர்களை தாக்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கியதாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இளைஞர்களை தாக்கிய கும்பல் கொடுத்த தகவலின் பேரில் காவல் துறையினர் இரண்டு இளைஞர்களை நள்ளிரவு நேரத்தில் கைது செய்து தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்காமல். முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர்களை அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியு நிலையில் பாதிப்புக்குள்ளான இளைஞர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவு பிறப்பித்தார்.

பாதிக்குப்புக்குள்ளான இளைஞர்களின் வழக்கறிஞர் வடிவேலன் சம்பவம் குறித்து விரிவாக எடுத்துக் கூறியதில், காவல் துறையினர் பொய் புகார் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். வழக்கறிஞரின் தகவலை அடுத்து குற்றவியல் நடுவர் நீதிபதி, இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் உடனடியாக அரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உத்தரவிட்டார். புகாரை பெற்றுக் கொள்ளும் காவல்துறையினர் உடனடியாக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

சம்பவம் குறித்து புகார் அளித்த வழக்கறிஞர், இளைஞர்கள் பெட்ரோல் கேனை கொண்டு மிரட்டல் விடுத்ததாக பொய் புகார் பதிவு செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல் இரவு முழுக்க காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அரூர் காவல் நிலையத்தில் பொது மக்கள் புகார் கொடுத்தால் விசாரணை செய்யாமல் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் புகார்களை பெற்றுக் கொள்ளும் காவல்துறையினர் சமரசம் செய்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் மனுக்களை கொடுத்தால் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும் அரூர் காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் இது குறித்து தமிழக காவல்துறையும் தர்மபுரி மாவட்ட நிர்வாகமும் உரிய நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags

Next Story