சேலம் மத்திய சிறையில் நீதிபதி ஜெயந்தி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் நீதிபதி ஜெயந்தி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிக்காக நீதிபதி ஜெயந்தி ஆய்வு செய்தார்.


சேலம் மத்திய சிறையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிக்காக நீதிபதி ஜெயந்தி ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள அறைகளில் நிர்ணயிக்கப்பட்ட கைதிகளை விட அதிக கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளார்களா? அப்படி இருந்தால் புதிதாக அறைகள் கட்ட வேண்டுமா? என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள சிறைகளை ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தலைவராக மாவட்ட நீதிபதி சுமதி, உறுப்பினர்களாக கலெக்டர் பிருந்தா தேவி, சூப்பிரண்டு அருண் கபிலன் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட நீதிபதி சுமதி உத்தரவின்பேரில் சேலம் போக்சோ கோர்ட்டு நீதிபதி ஜெயந்தி நேற்று சேலம் சிறையில் ஆய்வு நடத்தினார். அதேபோல் சேலம் பெண்கள் சிறை மற்றும் ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர் ஆகிய கிளை சிறைகளில் நீதிபதிகள் பலர் ஆய்வு நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story