திறந்தவெளி சிறைச்சாலையில் நீதிபதிகள் ஆய்வு

திறந்தவெளி சிறைச்சாலையில் நீதிபதிகள் ஆய்வு

சிவகங்கை அருகேயுள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் மதுரை, ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

சிவகங்கை அருகேயுள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் மதுரை, ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், புரசடை உடைப்பிலுள்ள திறந்தவெளி சிறையை மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சிறையில் 84 ஏக்கரில் கைதிகள் மூலம் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல், கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவடிக்குமார் சிறையை பார்வையிட்டனர். இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மரவள்ளி கிழங்கு, வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாய பணிகளையும், வேளாண் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா மூலம் பரிந்துரை செய்யப்பட்ட வம்பன் ரக உளுந்து சாகுபடியையும் பார்வையிட்டனர்.

நீதிபதிகள் தென்னை மரக்கன்றுகள் நட்டு பணியை துவக்கி வைத்தனர். மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உடனிருந்தனர்.

Tags

Next Story