பூண்டி பகுதியில் வருகிற ஜூன் 13ஆம் தேதி மின்தடை

பூண்டி பகுதியில் வருகிற ஜூன் 13ஆம் தேதி மின்தடை

கோப்பு படம்

பூண்டி பகுதியில் வருகிற ஜூன் 13ஆம் தேதி மின்தடை ஏற்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் ஆகிய இரண்டு துணை மின்நிலையத்திலும் 13-ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதை முன் னிட்டு இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினி யோகம் பெறும் பகுதிகளான பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம்,மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமர் கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்குநத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில்,துறையுண்டார்கோட்டை ஆகிய ஊர்களுக்கு அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சாலியமங்கலம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் உதவிசெயற்பொறியாளர் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story