ஜூன் 4 டாஸ்மாக் கடை மூட உத்தரவு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு முழுவதும் வருகிற 4 -ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் 4 ம் தேதி காலை 10 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை எவ்வித மதுபான விற்பனையும் செய்யக்கூடாது. அரசிடமிருந்து கொள்முதல் செய்யும் மதுபானங்களை சில்லறை விற்பனை கடைகளுக்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ கூடாது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், FL2 மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள், மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியன நாள் முழுவதும் செயல்படமாட்டாது. இதனை மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.