இளநிலை உதவியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
கல்வித்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு என புதிதாக உருவாக்கப்பட்ட, இளநிலை உதவியாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் , பழைய பேருந்து நிலையம் அருகே துறையூர் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது, இளநிலை உதவியாளர் முருகேசன் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அளவில் சங்க ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு இதில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்,
மேலும் கூட்டத்தில், ஒருங்கிணைப்பு குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை சங்கத்தில் இணைக்கும் பணியில் ஈடுபடுவது என்றும், பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் பணிபுரியும் அனைத்து இளநிலை உதவியாளர்களையும் உறுப்பினர்களாக இணைக்கும் வரை ஒவ்வொரு வாரமும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்றும், பத்து ஆண்டுகளாக அதற்கு மேலாகவும் இளநிலை உதவியாளராக பணிபுரியும் அனைவருக்கும் ரூ 4300 என்ற அடிப்படையில் அரசு விதிகளில் உள்ளபடி பணியிடமாக மாற்றிட வேண்டும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பள்ளி கல்வித்துறையில் நேரடி உதவியாளர் நியமனத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையானை பெற்று நிறுத்துவது, பத்தாண்டுக்கு மேலாக இளநிலை உதவியாளர்களாக பணிபுரிபவர்களுக்கு விரைவில் பதவி உயர்வுவழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கும், கல்வித்துறைக்கும் முன்வைத்து, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட சங்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களான ராஜேந்திரன், கிருஷ்ணவேணி, அசோக்குமார், அருண்நேரு, சக்திவேல், முருகேசன், அசோக்குமார், மருதராஜ், சாந்தி, மணிகண்டன், உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்