ஜூனியர் மினி மாரத்தான் போட்டி !

ஜூனியர் மினி மாரத்தான் போட்டி !

நாமக்கல்

குமாரபாளையத்தில் மாணவர்கள் செல்போனில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் குறித்து ஜூனியர் மினி மாரத்தான் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்தில் இளைய தலைமுறையினர் செல்போனில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டில் ஆர்வத்தினை மிகுதிபடுத்த குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜூனியர் மாரத்தான் மினி போட்டி நடைபெற்றது.

இதில் 7 வயது முதல் 15வயது வரைவரை என 900க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிறுமிகள் பங்கேற்றனர். மாரத்தான் போட்டி ஆனங்கூர் பிரிவில் தொடங்கி கத்தேரி,காந்திசிலை என 5கி.மீ தூரம் வரை சென்று மீண்டும் ஆனங்கூர் பிரிவில் முடிவடைந்தது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் நகர மன்ற தலைவர் சஷ்டி விஜய் கண்ணன் கலந்து கொண்டு மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜூனியர் மாரத்தான் போட்டியில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வடக்கு நகர மன்ற திமுக பொறுப்பாளர் சஷ்டி த.விஜய கண்ணன் சிறுவர் சிறுமியருக்கு பதக்கம், சான்றிதழ்,பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அகரன் நேட்டிவ் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் பிரதீப் ராஜகோபால் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ குகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர் இனியராஜ் விளையாட்டு பிரிவு ஆசிரியர்கள் முருகேசன் சுகுமார் கார்த்தி,அன்புக்கரசி மற்றும் ராஜேந்திரன் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story