சவுண்டம்மன் திருவிழாவில் ஜோதி திருவீதி உலா

குமாரபாளையம் சவுண்டம்மன் திருவிழாவில் ஜோதி திருவீதி உலா  வைபவத்தில்  வீர குமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர்.   

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சேலம் சாலை சவுண்டம்மன் திருவிழா ஜன. 8ல் முகூர்த்தக்கால் வைபவத்துடன் துவங்கியது. முதல் நிகழ்வாக சக்தி அழைப்பு வைபவம் நடந்தது. நேற்றுமுன்தினம் சாமுண்டி அழைப்பு வைபவம் நடந்தது.

நேற்று ஜோதி திருவீதி உள்ள வைபவம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் துவங்கிய ஜோதி திருவீதி உலா தம்மண்ணன் வீதி, அக்ரஹாரம், புத்தர் வீதி, சேலம் சாலை, கலைமகள் வீதி, ராஜா வீதி, திருவள்ளுவர் வீதி, ஜே.கே.கே. வீதி வழியாக கோவிலில் நிறைவு பெற்றது. இதில் ஜோதி வடிவான அம்மனை வீர குமாரர்கள் கத்தி போட்டவாறு அழைத்து வந்தனர்.

வழி நெடுக பொதுமக்கள் தங்கள் பகுதி சாலையை தண்ணீர் ஊற்றி தூய்மை படுத்தி, ஜோதி வடிவமாக வந்த அம்மனை வழிபட்டனர். இன்று காலை மஞ்சள் நீராட்டு திருவீதி உலா, மாலையில் அலங்கார ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags

Next Story