திருவண்ணாமலை கிராம நிர்வாக அலுவலராக கே.காமேஷ்குமார் பொறுப்பேற்பு
கிராம நிர்வாக அலுவலர் கே.காமேஷ்குமார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் திருவண்ணாமலை. வட்டம் நூக்காம்பாடி கிராம நிர்வாக அலுவலர் கே.காமேஷ்குமார் மாற்றப்பட்டு திருவண்ணாமலை கிராம நிர்வாக அலுவலராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு வருவாய் துறை அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர் இங்கு இதற்கு முன்பு பணியாற்றிய அ.எழுமலை மங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். மங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய கோட்டீஸ்வரன் தச்சம்பட்டுக்கு மாற்றப்பட்டார். வள்ளிவாகை கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் தூக்காம்பாடி கூடுதலாக கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுவார் என மாவட்ட ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story