சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2 ஆம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வலியுறுத்தல்

சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2 ஆம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வலியுறுத்தல்

சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2 ஆம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் - மாநிலங்களவையில் கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வலியுறுத்தல்

சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2 ஆம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் - மாநிலங்களவையில் கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வலியுறுத்தல்

நாமக்கல், ஜுலை 25 -

டெல்லியில் மாநிலங்களவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அவையில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2021-22 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், ஒன்றிய அரசின் நிதியமைச்சர், கடந்த ஆகஸ்ட் 17, 2021 அன்று பொது முதலீட்டு வாரியம் மூலம் சென்னை மெட்டோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்காக ரூ. 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக அறிவித்தார். எனினும், இந்த திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதார விவகாரங்களுக்காக அமைச்சரவைக் குழுவின் (CCEA) ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த தாமதத்தால் தமிழ்நாடு அரசே முழு செலவையும் ஏற்று பணிகளை செயல்படுத்தி வருகிறது.

ஒன்றிய அரசின் தாமதத்தால் மாநிலத்தின் நிதிநிலையை கடுமையாக பாதிக்கிறது. இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் டோகன் சாஹு அவா்களிடம் நான் ஒரு கேள்வியை எழுப்பினேன், அதற்கு 118.9 கிலோமீட்டர் சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது என்றும், திட்டத்தின் அனுமதி சாத்தியக் கூறுகளைப் பொறுத்தது என்றும் பதில் அளித்துள்ளார்.

சென்னை மெட்ரோ மக்கள் தொகை சுமார் 1.2 கோடி என மிகப் பெரிய அளவில் உள்ளது. இதனால் ஒரு சதுர கி.மீ.க்கு 26,533 பேர் என்ற மக்கள் தொகை அடர்த்தியின் காரணமாக சென்னை நகரில் போக்குவரத்து பரபரப்பாக உளளது. மெட்ரோ நெட்வொர்க்குகள் உள்ள டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட மற்ற நகரங்களை ஒப்பிடுகையில், சென்னை மக்கள் பெருநகரங்களுக்கு இணையாக நாள்தோறும் சுமார் 25 கி.மீ தூரம் பயணித்து வருகின்றனா். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மெட்டோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்காக மீண்டும் நிதியுதவி வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு முன்பு அறிவிக்கப்பட்ட நிதியை ஒதுக்க வேண்டும். ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களையும் ஒரு தாய் போல சமமாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story