பழனியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கபடி போட்டி

பழனியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கபடி போட்டி

கபாடி போட்டி 

பழனியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கபடி போட்டி நடைபெற்றது.

பழனியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதன் ஒருபகுதியாக இன்று மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டி நடைபெற்றது. பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி போட்டியை துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 16கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கவிதை, கட்டுரை,

ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வழங்கினார்.

Tags

Next Story