ராமநாதபுரத்தில் கபடி போட்டி

நரிப்பையூர் வட்டார நாடார் இளைஞர் பேரவையின் 23ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி காமராஜர் திடல் வளாகத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம் நரிப்பையூர் வட்டார நாடார் இளைஞர் பேரவையின் 23ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி காமராஜர் திடல் வளாகத்தில் நடைபெற்றது. பேரவை தலைவர் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்ற போட்டியில் நரிப்பையூர் வட்டார நாடார் சங்க தலைவரும், ஓய்வுபெற்ற நல்லாசிரியர் விருது பெற்றவருமான தங்கப்பாண்டியன் ஆசிரியர் முன்னிலை வகித்தார். பேரவை செயலாளர் சரவண முருகன் அனைவரையும் வரவேற்றார். தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 60 கபடிக்குழு வீரர்கள் கலந்துகொண்டனர். விளையாட்டு போட்டியை சாயல்குடி காவல் ஆய்வாளர் முகமது இத்ரீஸ், நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பகல் இரவாக இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிக்கோப்பையுடன் ரொக்கப்பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நரிப்பையூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆட்டத்தை கண்டு ரசித்தனர். போட்டியில் கலந்துகொண்ட அணியினருக்கும், பார்வையாளர்களுக்கும் நாடார் இளைஞர் பேரவை செயலாளர் சார்லஸ் நன்றி கூறினார்.

Tags

Next Story