திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கபடி போட்டி

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கபடி போட்டி

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு 

சேலம் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தலைவாசல் அருகே தேவியாகுறிச்சியில் கபடி போட்டி நடைபெற்றது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக தலைவாசல் வடக்கு ஒன்றியம் தேவியாகுறிச்சியில் அளவிலான கபடி போட்டி நடந்தது. ஒன்றிய கழகச் செயலாளர் மணி (எ) பழனிசாமி தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரண்ட்ஸ் ரமேஷ்,மாவட்ட துணை அமைப்பாளர்கள் முனைவர் தங்கபாண்டியன், ஏற்காடு ரமேஷ் பாபு, ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழும் பரிசு தொகையுடன் கூடிய கோப்பையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள் பிச்சமுத்து, கிருஷ்ணன், தமிழ்ச்செல்வி, அழகுவேல், ரமேஷ், தேவேந்திரன்,பாஸ்கரன், காசிலிங்கம்,அமுதா ஜெயக்குமார், சுகந்தி பெரியசாமி, பொன்னுசாமி மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் செல்வம், முத்துவேல், ஜெயவேல், ரமேஷ், அருள்மணி, சின்னசாமி, ராமச்சந்திரன், ரமேஷ், ராஜேந்திரன் , ஜெயசூர்யா, மணிகண்டன் கலந்து கொண்டுள்ளனர். முதல் பரிசை EPM சேகுவேரா அணி,இரண்டாம் பரிசை தேவியாகுறிச்சிஅணி ,மூன்றாம் பரிசை ஊனத்தூர் அணியினர் வென்றனர்.

Tags

Next Story