கபிலர் தூணை இயக்குனர் ஆய்வு
இயக்குனர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கபிலர் தூணை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கோவிலுார் கபிலர் குன்று அருகே கபிலர் கோட்டம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆட்சியின் போது கபிலர் நினைவுத்துாண் சிறிய அளவில் கட்டப்பட்டது. அருங்காட்சியகத்துடன் கூடிய கோட்டம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, நினைவுத் துாண் திறக்கப்படாமலேயே இருந்தது.
இந்த நினைவுத் துாணை வரும் 7ம் தேதி திறப்பது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வைஅருள் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகரமன்ற தலைவர் முருகன், கோவல் தமிழ்ச் சங்கத் தலைவர் உதியன், உதவி இயக்குனர் சித்ரா, நகராட்சி கவுன்சிலர்கள் சம்பத், கோவிந்தராஜன், கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story