கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

 கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் ராஜ வீதியில் அமைந்துள்ள கச்சபேஸ்வரர் கோவில் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த காஞ்சி நகர செங்குந்த மகாஜன சங்க சமுதாயத்தினர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பணி துவங்க, 2022, பிப்., 11ல் பாலாலயம் நடந்தது. இதில், 3 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் மற்றும் கோவிலில் உள்ள பிற கோபுரங்கள், பஞ்ச சந்தி விநாயகர், துர்க்கை, நடராஜர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னிதி வாசற்படிகள் முழுதும் பித்தளை கவசம் பொருத்தப்பட்டுள்ளது. பஞ்சமூர்த்தி வீதியுலா கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, கோவில் சர்வசாதகம் சுப்பிரமணிய குருக்கள், இஷ்டசித்தி பிரபாகர குருக்கள் தலைமையில், 30 யாகசாலைகளில், 4 நவ குண்டங்கள், 63 யாக குண்டங்களில் 160 சிவாச்சாரியார்கள் பங்கேற்ற யாகசாலை பூஜை, கடந்த 28ல் துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று, காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, காலை 10:22 மணிக்கு, விமானம், ராஜகோபுரம், ரிஷிகோபுரம் உள்ளிட்ட பிற சன்னிதி கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது.

Tags

Next Story