கடம்பூர் : சாலையில் மூங்கில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
கடம்பூரில் பலத்த காற்று வீசியதில் மூங்கில் மரம் சாலையில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தி அடுத்த கடம்பூர் மலைப்பகுதியல் கோடை வெயில் சுட்டெரித்தது. இதன் காரணமாக கடம்பூர் மலைப்பகுதியில் அனல் காற்று வீசியது. இந்நிலையில் நேற்று மாலையில் கருமேகங்கள் கழ்ந்து நின்றன. திடீரென கோடைக்காற்று பலமாக வீசியதால் அணைக்கரையில் இருந்து கோட்டமாளம் செல்லும் சாலையில் அணைக்கரை முதல் தரைப்பாலத்தில் ரோட்டோரமாக இருந்த மூங்கில் மரம் ஒன்று ரோட்டில் விழுந்தது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது . தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கிருந்து பொதுமக்கள் உதவியுடன் ஓங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதையடுத்து அப்போது பகுதியில் போக்குவரத்து சீரானது.
Next Story