காடுவெட்டி குரு பிறந்தநாள் கொண்டாட்டம்

காடுவெட்டி குரு பிறந்தநாள் கொண்டாட்டம்

காடுவெட்டி குரு

அரியலூரில் நடந்த மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழாவில் வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் அவரது திருவுவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அரியலூர் ஒன்றிய பகுதிகள் முழுவதும் மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது. இதனையொட்டி அரியலூர் பேருந்து நிலையம் அருகே மறைந்த காடுவெட்டி குருவின் திருவுறுவ படத்திற்கு வன்னியர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இதனையடுத்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story