கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

 திருப்பூர், போயம்பாளையம் பிரிவு, கங்கா நகரிலுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் உடனமர் கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருப்பூர், போயம்பாளையம் பிரிவு, கங்கா நகரிலுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் உடனமர் கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருப்பூர் போயம்பாளையம் பிரிவு கங்கா நகர் பகுதியில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் உடனமர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் புதிதாக ஸ்ரீ தக்ஷ்ண காசி காலபைரவர் மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் பரிவார மூர்த்திகள் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலய கும்பாபிஷேக விழாவானது நேற்று நடைபெற்றது. கடந்த 22 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை , கணபதி ஹோமம் , காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நேற்றைய தினம் இரண்டாம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் உடனமர் ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் போயம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Tags

Next Story