கைலாசபுரம் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா தொடக்கம்

X
கொடியேற்றம்
திருச்சி அருகே பெல் கைலாசபுரத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி மாவட்டம் பெல் கைலாசபுரத்தில் பத்மாவதி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 14- ஆவது ஆண்டு பிரம்மோத்ஸவ விழா மாா்ச் 14- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி திங்கள்கிழமை யாகசாலை பிரவேசம் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. மாா்ச் 7- ஆம் தேதி கருட சேவையும், 12- ஆம் தேதி தோ்திருவிழாவும் நடைபெறுகிறது. மாா்ச்14 -ஆம் தேதி விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது. முன்னதாக கொடியேற்ற நிகழ்வில் பெல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
Next Story
