காலபைரவர் கோயில் சிறப்பு வழிபாடு
அதியமான் கோட்டை தட்சிண காசி காலபைரவர் திருக்கோவிலில் நடந்த தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட அதியமான் கோட்டை கிராமத்தில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு தட்சிண காசி காலபைரவர் தலைமை அமைந்துள்ளது ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று மாசி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு பைரவருக்கு அதிகாலையில் விஸ்வரூப தரிசனமும் தொடர்ந்து கணபதி ஹோமம் 64 பைரவர் ஹோமங்கள் ஏகாந்த ருத்ர ஹோமம் கோ பூஜைகள் ஆஸ்துவ பூஜை நடைபெற்றது.
இதனை அடுத்து சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் , வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வெண் பூசணியில் நெய் தீபம் ஏற்றி சுவாமியை சிறப்பு வழிபாடு செய்தனர்.மேலும் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story




