நாகை மாணவிக்கு கலை வளர்மணி விருது

நாகை மாணவிக்கு கலை வளர்மணி விருது

மாணவி யாழினி 

தமிழக அரசின் "கலை வளர்மணி விருது" நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவி யாழினிக்கு வழங்கட்டது

கலை பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசின் "கலை வளர்மணி விருது" வழங்கப்படுவது வழக் கம். அதன்படி நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல் லூரியில் பயோமெடிக்கல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி யாழினி 10 ஆண்டுகளாக வீணை இசைத்து வருகிறார்.

இவர் வீணை இசையில் மாவட்ட, மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இது தவிர 100-க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார்.

திறமையை ஊக்குவிக்கும் விதமாக வீணை கலைஞர் யாழினிக்கு "கலை வளர்மணி விருது" திருவாரூரில் நடந்த புத்தக கண்காட்சியில் கலை பண் பாட்டு துறை சார்பில் வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவிக்கு கல்வி குழுமத்தின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற் றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story