தேய்பிறை அஷ்டமி - காலபைரவருக்கு தங்க கவச அலங்காரம்
காசி காலபைரவர்
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேலம் காசி காலபைரவர் தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
சேலம் மத்திய சிறை பின்புற பகுதியில் உள்ள காசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பால், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது தொடர்ந்து சாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story