கலைஞர் 101 : அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு

கலைஞர் 101 : அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு

 மதிய உணவு வழங்கல் 

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நத்தக்காடையூர் தளபதி அர்ச்சுன மன்றாடியார் ஞாபகார்த்த அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தி.மு.க. சார்பில் மதிய உணவு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் வெஸ்ட் ஆர்.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தி.மு.க.முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வி.சி.குணபாலன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் காங்கயம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.கருணை பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் மதிய உணவு வழங்கினார்.விழாவில் நத்தக்காடையூர் பகுதி தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி பெற்றோர்- ஆசிரியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை மு.பெ.மனோன்மணி நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story