தி.மலையில் கலைஞர் நூற்றாண்டு விழா:சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம்

தி.மலையில் கலைஞர் நூற்றாண்டு விழா:சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம்

கலைஞர் நூற்றண்டு விழா கருத்தரங்கு 

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கல்லூரி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்குக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஒஜோதி ஆகியோர் முன்னிலை வகிக்க சட்டபேரவை செயலாளர் கி.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். இதில் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கருத்தரங்கை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகையில், சட்டமன்றத்துக்கு பொறுப்பாளர் சபாநாயகர்தான் .18 ஆண்டுகளுக்கு பிறகு உங்களை சந்திக்க ஒருவாய்ப்பு இன்றைக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிப்பவர்களுக்கு அதிக பொறுப்பு உண்டு. தமிழ்நாட்டில் 1957ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 15 எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர் வடாற்காடு மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோதுதான் ப.உ.சண்முகம் உள்பட 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உலகளவில் அதிக ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக கலைஞரைப்போல் இதுவரை வேறுயாருமில்லை இருந்ததில்லை. கன்னியாகுமரிமுதல் சென்னை வரை கலைஞர் அரசு பள்ளிகளை அதிகளவில் ஆரம்பித்துவைத்தார். தமிழகத்தில் கலைஞரின் அடையாளம் அனைத்து ஊர்களிலும் உள்ளது. எனவே தமிழ்நாட்டுக்கு கலைஞர் நாடு என பெயர் மாற்றம் வேண்டும். அப்போதுதான் நான் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்றார். இந்த கருத்தரங்கில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாவட்ட ஆட்சியர் பா.முரு கேஷ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் எஸ்கேபி கல்வி குழுமத்தின் தலைவர் கு.கருணாநிதி மற்றும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் ந.ரவிச்சந்திரன் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவை இணை செயலாளர் வ.பூபாலன் துணை செயலாளர் சீ.உஷா சார்பு செயலாளர் ஏ.மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story