கலைஞர் நூற்றாண்டு விழா: பள்ளப்பட்டியில் கடன் வழங்கும் முகாம்

X
கடன் வழங்கும் விழா
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கரூர் கூட்டுறவு துறை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் வழங்கும் விழா பள்ளப்பட்டி, ஷா நகர், மினார் ஹோமில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ, பள்ளப்பட்டி நகர மன்ற தலைவர் முனைவர் ஜான், பள்ளப்பட்டி திமுக நகர செயலாளர் வாசிம்ராஜா, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் அரசு, கரூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கந்தராஜ், துணைப் பதிவாளர்கள் ஆறுமுகம், அபிராமி மற்றும் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 245 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 25 லட்சத்து 34,000 கடன் உதவியை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ வழங்கினார்.
Next Story
