கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்
தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நேற்று பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை திருச்சங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, கண் நோய், காது கேளாமை, பல் நோய், காச நோய் தொழுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள் பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். நோயால் அவதிப்படும் பொது மக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது சிறு தானியங்களால் அமைக்கப்பட்டிருந்த பொம்மை காண்போரை கவர்ந்தது. பயறு வகைகள் கீரை வகைகள் கிழங்கு வகைகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் , நகர் நல அலுவலர் , திருச்செங்கோடு திமுக நகர கழக செயலாளர்நகர மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
