நாகர்கோவிலில் கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவ முகாம்

நாகர்கோவிலில்  கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவ முகாம்
மருத்துவ முகாமில் மேயர் மகேஷ்.
வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குருசடி பகுதியில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார், மண்டல தலைவர் ஜவகர், திமுக மாநகர செயலாளர் ஆனந்த் உட்பட பல கலந்து கொண்டனர். பின்னர் மகேஷ் நிருபர்களிடம் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி முதற்கட்டமாக நான்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, தற்போது வரை மூன்று முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே நடந்த இரண்டு மருத்துவங்களிலும் தலா சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பரிசோதனை செய்துள்ளனர். இந்த முகாமிலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நான்காவது மருத்துவ முகாம் வரும் 30ம் தேதி நடக்க இருக்கிறது என கூறினார்.

Tags

Next Story