சிவகங்கையில் கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவமுகாம்

X
மருத்துவ முகாம்
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் இளையான்குடி சாலையில் உள்ளதனியார் திருமணமண்டபத்தில் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் வாசன் ஐ கேர் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முன்னதாக இந்நிகழ்வை சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா மற்றும் மருத்துவ இணை இயக்குநர் விஜய சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில் இலவச கண் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு அனைவருக்கும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது
Next Story
